×

ஓசூர் அருகே ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு

ஓசூர், ஜூன் 7:ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் சாலையோரத்தில் இருந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பினால், 12 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறி சாலையில் ஆறாக ஒடியது. இதனையடுத்து, பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து குடிநீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, உடைந்த குழாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோடையில் வறட்சி ஏற்பட்டு, குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பல லட்சம் லிட்டர் குடிநீர் ஆறாக வீணாக ஓடியது அப்பகுதி மக்களை வேதனையடைய செய்தது.

Tags : water pipe ,Hogenakkal ,Hosur ,
× RELATED குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் மூச்சுச்திணறல்